Jan 16

கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று

தமிழீழ விடுதலைப் பலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவராக கூறப்படும் கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று அநுட்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது.

புதுக்குடியிருப்பு கைவேலிப்பகுதியில் அமைந்துள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தமிழீழ விடுதலைப் பலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவராக கூறப்படும் சதாசிவம் கிருஸ்ணகுமார் எனும் இயற்பெயர் கொண்ட கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை அநுட்டிக்கப்பட்டது.

ஜனநாயக போராளிகள் கட்சியின் மகளீர் பிரிவினை சேர்ந்த ராதா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் கதிர், முன்னாள் போராளி கேணல் கிட்டு இறந்த பின்பும் அவரது வார்த்தைகள் தமது படையினர் மீண்டும் எழுச்சி பெற உதவியதாக தெரிவித்தார்.

இதேவேளை இங்கு கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின்  புதுக்குடியிருப்பு பகுதி வேட்பாளர் ஜனமேனத், யுத்தத்தின் போது அங்கவீனமாக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.