Jan 16

பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு விமானத்தில் பறந்த உணவுகள்

ஒரு காலத்தில் இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரித்தானியர்கள் இன்று இந்தியாவின் உணவுகளுக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள்.பிரான்சு நாட்டில் வாழும் பிரித்தானியர்களுக்காக ஆகாஷ் தந்தூரி ரெஸ்டாரண்டிலிருந்து உணவுகள் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

"பிரான்சில் சில இந்திய உணவகங்கள் இருந்தாலும் அவை பிரித்தானியாவில் கிடைக்கும் இந்திய உணவின் சுவைக்கு கிட்டக்கூட வருவதில்லை, ஏனெனில் பிரான்சு நாட்டவர்கள் காரசாரமான உணவுகளை விரும்புவதில்லை” என்று கூறும் Roy Buchan, ஆகாஷ் தந்தூரி ரெஸ்டாரண்டின் ரெகுலர் கஸ்டமர்களில் ஒருவர்.அவர் தனது பிரித்தானிய நண்பரும் பைலட்டுமான James Emeryயின் உதவியுடன் இந்திய உணவுகளை பிரான்சுக்கு கொண்டு செல்ல உதவியுள்ளார்.

பிரித்தானியாவின் Lee-on-Solent விமான தளத்திலிருந்து Chicken Tikka Masala, Lamb Balti, Bengal Naga Chicken மற்றும் Vegetable Paneer Korai, rice மற்றும் naan ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட Curry Air என்று செல்லமாக அழைக்கப்படும் விமானம் சனிக்கிழமை Bordeaux Saucats விமான தளத்தை அடைந்தது. பிரித்தானியாவைச் சேர்ந்த 30 பேரும் அவர்களது பிரான்சு நாட்டு நண்பர்களும் இந்த உணவை ரசித்து ருசித்தனர்.