May 12

வித்தியா படுகொலை வழக்கின் குற்றப்பகிர்வு பத்திரம் நீதிபதி மா.இளஞ்செழியனிடம் ஒப்படைக்கப்பட்டது

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை வழக்கின் குற்றப்பகிர்வு பத்திரம் யாழ். மேல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றப்பகிர்வு பத்திரம் (12) யாழ். மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மா.இளஞ்செழியனிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேற்படி வழக்கேடுகளை இரும்பு பெட்டகத்தில் வைத்து பாதுகாக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், யாழ்.மேல் நீதிமன்ற பதிவாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேவேளை, மேற்படி வழக்கை கொழும்பில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணை செய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்த நிலையில், குறித்த வழக்கை யாழ்ப்பாணத்தில் நடத்த வலியுறுத்தி புங்குடுதீவு மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.