May 12

கனடாவில் தங்க நிரந்தர இடமில்லாமல் திணறும் புலம்பெயர்ந்தவர்கள்

கனடாவின் மணிடோபா மாகாணத்துக்கு அதிகளவில் வரும் புலம்பெயர்ந்தவர்கள் தற்காலிகமான வீடுகளில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கனடாவின் மணிடோபா மாகாணத்தின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில், சில நாட்களுக்கு முன்னர் Winnipegக்கு வந்த 52 புலம்பெயர்ந்தவர்கள் The Salvation Army என்னும் தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டனர்.

மேலும், கடந்த வியாழகிழமை கிரேட்னாவில் திறக்கப்பட்ட புதிய வரவேற்பு மையத்தில் 26 பேர் தற்காலிகமாக தங்கினார்கள்.

இந்த மையத்தில் 60 பேர் வரை தங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக தினம் 50 புலம்பெயர்ந்தவர்கள் Salvation Armyன் இடத்தில் தங்குகிறார்கள்.

இந்த வருடத்தில் மட்டும் மணிடோபாவுக்கு 500 பேர் புலம்பெயர்ந்துள்ளார்கள்.

இப்படி தற்காலிகமாக தங்கிருக்கும் இவர்கள் அனைவரும் அகதிகள் விண்ணப்ப முறைக்காக காத்திருக்கிறார்கள்.

இதில் அதிகபட்சமாக கடந்த மார்ச் மாதம் 10ஆம் திகதி 89 பேரும், குறைந்தபட்சமாக பிப்ரவரி மாதம் 18ஆம் திகதி 41 பேரும் தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் இரவு தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனிடையில் Salvation Armyன் இடத்தில் தங்குபவர்களுக்கு உணவு கொடுக்க இன்னும் அதிக நிதி தேவைப்படுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 9400 உணவு பொட்டலங்கள் புலம்பெயர்ந்தவர்களுக்கு தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.