May 12

வந்தவாசி அரசுப்பள்ளி இரட்டையர்கள் மாவட்ட அளவில் சாதனை

 பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் வந்தவாசி அரசுப்பள்ளியில் படித்த இரட்டையர்கள் மு.வெ.நிலாபாரதிமு.வெ.அன்புபாரதி இருவரும் மாவட்ட  அளவில் அதிக மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.

2016-17 கல்வியாண்டிற்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில்திருவண்ணாமலை மாவட்டம்வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த இரட்டையர்கள் மு.வெ.நிலாபாரதிமு.வெ.அன்புபாரதி இருவரும் அதிக மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளனர். 

மு.வெ.நிலாபாரதிதமிழ் -195 ஆங்கிலம் - 183இயற்பியல் - 197 வேதியியல் - 200 கணிதம் - 198உயிரியல் - 196 என மொத்தம் 1169 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். 

மு.வெ.அன்புபாரதி தமிழ் -191 ஆங்கிலம் - 188 இயற்பியல் - 197 வேதியியல் - 195 கணிதம் - 199உயிரியல் - 195 என மொத்தம் 1165 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

 கவிஞர்கள் மு.முருகேஷ்அ.வெண்ணிலா இந்த இரட்டையர்களின் பெற்றோர் ஆவர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மு.வெ.அன்புபாரதி 495 மதிப்பெண்களும் மு.வெ.நிலாபாரதி 491 மதிப்பெண்களும் பெற்று செய்யாறு கல்வி மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்வு முடிவு குறித்து அவர்களிடம் கேட்டபோது “இருவருமே மருத்துவம் படிக்கும் எண்ணத்தில் இருக்கிறோம். அதற்காக கடந்த வாரம் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வை எழுதியுள்ளோம். மாநில பாடத்திட்டத்தில் படித்த எங்களுக்குஇ சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விகளை எதிர்கொள்வதில் சற்று சிரமம் இருந்தது. ஆனாலும் முயற்சி செய்து எழுதியுள்ளோம். அதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என உறுதியாக நம்புகிறோம்...” என்றனர்.