May 12

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் ஜோகோவிச்

ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஜோகோவிச் (செர்பியா) ஸ்பெயின் வீரர் பெலிசியானோ லோபெஸ்சை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஜோகோவிச் (செர்பியா) 6-4 7-5 என்ற நேர்செட்டில் ஸ்பெயின் வீரர் பெலிசியானோ லோபெஸ்சை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். 

மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிகோரி 6-46-3 என்ற நேர்செட்டில் ஸ்பெயின் வீரர் டேவிட் பெரரை தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் பெல்ஜியம் வீரர் டேவிட் கோபின் 6-4 6-2 என்ற நேர்செட்டில் கனடாவின் மிலோஸ் ராவ்னிச்சை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கனடா வீராங்கனை பவுச்சர்ட் 6-3 5-0 என்ற செட் கணக்கில் முன்னிலையில் இருந்த போது அவரை எதிர்த்து ஆடிய ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் காயம் காரணமாக விலகினார். 

இதனால் பவுச்சர்ட் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார். பெண்கள் இரட்டையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் சானியா மிர்சா (இந்தியா)-யரோஸ்லாவா ஸ்வெடோவா (கஜகஸ்தான்) ஜோடி தோல்வி கண்டு வெளியேறியது.