Jan 13

பொலிஸாரின் பொங்கல் விழாவில் கலந்துகொண்ட வேட்பாளார்கள் – கட்சிகள் விசனம்!

வவுனியா மாவட்டத்தின், பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தினால் இன்று(13.01.2018) பொங்கல் விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்ட போதிலும், உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர், கலந்துகொண்டிருந்தமை தொடர்பாக அரசியல் கட்சிகள் விசனம் தெரிவித்துள்ளன.

வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் இன்று மாலை இடம்பெற்ற இந்த விழாவில் சிவில் சமூக அமைப்புகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இதன்போது வவுனியா நகரசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்துகொண்டிருந்ததுடன் பொங்கல் விழாவை முன்னின்று நடத்தியிருந்தனர்.

தேர்தல் நடைபெறும் நிலையில் பொலிஸாரே வேட்பாளர்களை அழைத்து இவ்வாறு பொங்கல் விழா நடத்தியமை தொடர்பாக, அழைப்பு கிடைக்கப்பெறாத அரசியல் கட்சிகள் சில விசனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் இவ்விடயம் தொடர்பாக தேர்தல் விதிமுறை மீறல் குறித்து, தாம் முறையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.