Jan 13

மகிந்தவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வரும் விதம் பற்றி கூறும் கம்மன்பில

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 2021ஆம் ஆண்டு வரை பதவியில் இருக்கலாம் என உயர்நீதிமன்றம் தீர்மானித்தால்,கூட்டு எதிர்க்கட்சி தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை களமிறக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சிங்கள வார பத்திரிகை ஒன்றிடம் அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், இது குறித்து தற்போதுசட்டவல்லுநர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய 6 ஆண்டு காலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிவகிக்கலாம் என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிட முடியும் என அவர் கூறியுள்ளார்.