May 12

சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுப்பட்ட வீடு முற்றுகை

முல்லைத்தீவு விஸ்வமடு பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட வீடு ஒன்று மது வரித் திணைக்களத்தினால் முற்றுகையிட்டப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் மதுவரித் திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீடு இன்று முற்றுகையிடப்பட்டது.

இதன்போது 750 மில்லி லீற்றர் மதுபானம் 75 லீற்றர் கோடா மற்றும் மதுபான உற்பத்திக்கான பொருட்களும் மதுவரித் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளனஇதேவேளை மதுபான உற்பத்தியினை மேற்கொண்ட வீட்டின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.