Mar 07

வேக வைக்க வேண்டாம், அப்படியே சாப்பிடலாம்!

குழந்தைகளுக்கு வேக வைக்காத குக்கீ மாவைச் சாப்பிடப் பிடிக்கும். நியூயார்க்கில் உள்ள டிஓ குக்கீ கடையில் வேக வைக்காத குக்கீ மாவுகளைச் சுவைக்கப் பெரியவர்களும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். 

நிறுவனர் கிறிஸ்டென் டோல்மன், “ஒருமுறை குக்கீ கடைக்குச் சென்றோம். அங்கே குக்கீகள் தீர்ந்துவிட்டன. வேக வைக்காத மாவை வாங்கிச் சுவைத்தோம். பிரமாதமாக இருந்தது. விரைவில் குக்கீ மாவு கடை ஒன்றை ஆரம்பிக்க முடிவெடுத்தேன்.

என் திருமணத்துக்கு 2 மாதங்களுக்கு முன்பு கோமா நிலைக்குச் சென்றேன். 3 வாரங்களுக்குப் பிறகு சுயநினைவு வந்தது. வாழ்க்கை மிகவும் சிறியது. அதில் என் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக குக்கீ மாவு கடையை ஆரம்பித்துவிட்டேன். 

விதவிதமான சுவைகளில் குக்கீ மாவுகளை அறிமுகம் செய்தேன். வேகமாகப் பிரபலமானது. காலை 10 மணிக்குக் கடையைத் திறப்போம். 8.30 மணிக்கே மக்கள் வரிசையில் காத்திருப்பார்கள். ஒரு நாளைக்கு 680 கிலோ குக்கீ மாவுகளை விற்பனை செய்கிறோம். 

13 சுவைகளில் குக்கீ மாவுகள் கிடைக்கின்றன. ஒரு கப் குக்கீ மாவு 267 ரூபாய். எங்கள் குக்கீ மாவு பாதுகாப்பானது. மாவை வறுத்துதான் பயன்படுத்துகிறோம்” என்கிறார் கிறிஸ்டென் டோல்மன்.