Jan 11

இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன்: விவோ அறிமுகம்

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் (சி.இ.எஸ். 2018) இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனினை விவோ அறிமுகம் செய்துள்ளது. 

முன்னதாக அல்ட்ராசோனிக் சென்சார் சார்ந்து இயங்கும் இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் தொழில்நுட்பத்தை விவோ நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்திருந்தது. அந்த வகையில் விவோ நிறுவனம் தயாரிப்பதற்கு ஏற்ற வகையில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

சினாப்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆப்டிக்கல் கைரேகை சென்சார் தொழில்நுட்பம் டிஸ்ப்ளேவினுள் இருந்தபடியே சீராக இயங்குகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் டிஸ்ப்ளேவின் மேல் தங்களது கை விரல்களை வைத்து ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்ய முடியும். 

புதி்ய தொழில்நுட்பத்தின் வரவு வழக்கமான கைரேகை ஸ்கேனருக்கு மாற்றாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விவோவின் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் கொண்ட முதல் ஸ்மாப்ட்போன் இந்த ஆண்டின் முதல் பாதியில் வெளியிடப்பட்டு விற்பனை துவங்க இருக்கிறது.விவோ போன்றே மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் தொழில்நுட்பம் இந்த ஆண்டு அதிகளவு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.