May 12

அமைச்சர் றிசாத்துடன் அரபு நாட்டை சேர்ந்த செல்வந்தர்கள் முல்லைத்தீவு விஜயம்

அமைச்சர் றிஸாத்பதியுயுதீனுடன் அரேபிய நாட்டினை சேர்ந்த செல்வந்தர்கள் அடங்கிய குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இன்றையதினம் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

முல்லைத்தீவு மாவடடத்தில் முஸ்லீம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்  தொடர்பாகவும் அவர்களின் நிலைமைகள் தொடர்பிலு  ஆராயும் பொருட்டு வருகைதந்திருந்த அரேபிய நாடடை சேர்ந்த முஸ்லீம் தனவந்தர்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் விசேட ஹெலி ஹொப்டர் மூலம் முல்லைத்தீவுக்கு வருகைதந்து முன்னதாக அரசாங்க அதிபர் பணிமனைக்கு சென்றிருந்தனர்.

பின்னர் அங்கிருந்து முல்லைத்தீவு நீராவிப்பிட்டியில் வசிக்கும் மக்களை நேரடியாக சென்று சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்ந்ததோடு அவர்களின் நிலைமைகளையும் நேரில் பார்வையிட்டிருந்தனர்.