May 11

ஐ.பி.எல் திருவிழா ; ஐயரின் அபாரத்தால் டெல்லி அபார வெற்றி

ஐ.பி.எல் தொடரில் கான்பூரில் நடைபெற்ற 50ஆவது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. நூணயச்சுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது.

குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுமித் - இஷான் கிஷான் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்தே டெல்லி அணி பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். முகமது ஷமி வீசிய 4ஆவது ஓவரில் சுமித் (08) சுரேஷ் ரெய்னா(06) அடுத்தடுத்து ஆட்டமிந்தனர்.

பின்னர் இஷான் கிஷானுடன் - தினேஷ் கார்த்திக் நிதனாமாக விளையாடி அணியின் ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினர். குஜராத் அணியின் ஸ்கோர் 56 ஓட்டங்களாக இருந்தபோது இஷான் கிஷான்;(34) ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய பிஞ்ச் - தினேஷ் கார்த்திக்குடன் சேர்ந்து அதிரடியாக விளையாடினர். குஜராத் அணி 17ஆவது ஓவரில் 148 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் தினேஷ் கார்த்திக் (40); ஆட்டமிழக்க அடுத்து ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். இந்தஓவரில்; ஆரோன் பிஞ்ச் சிக்சர் அடித்து அரை சதம் அடித்தார்.

ஆரோன் பிஞ்ச (69) ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களைக் குவித்தது. 

இதையடுத்து 196 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. ஆரம்ப வீரர்களான எஸ்.வி. சாம்சன் (10), கே.கே. நாயர் (30) ஆர்.ஆர். பேண்ட் (04) ஆட்டமிழந்தனர். 

பின்னர் அதிரடியாக ஆடிய எஸ்.எஸ். ஐயர் 57 பந்துகளில் 96 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஷமி (04);, அமித் மிஸ்ரா (08) ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கடி டெல்லி அணி 19.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 197 ஓட்டங்களைப்பெற்று  வெற்றியீட்டியது.