Jan 10

வர்த்தக நிலையத்தில் துப்பாக்கிதாரிகள் கொள்ளை: ஒருவர் காயம்

பாணதுறை பகுதியிலுள்ள இலத்திரனியல் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றில், கொள்ளையிடப்பட்டுள்ளது.

துப்பாக்கியுடன் நுழைந்த இருவர் பணத்தை கொள்ளையிட்டு விட்டு, மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. 

நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், குறித்த வர்த்தக நிலைய உரிமையாளரின் சகோதரரையும் சந்தேகநபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். 

இதனால், காலில் காயமடைந்த அவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதேவேளை, கடந்த ஜனவரி 18ம் திகதியும் இதுபோன்று குறித்த வர்த்தக நிலையத்தில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக, குறிப்பிட்டுள்ள எமது செய்தியாளர், இந்த சம்பவம் குறித்து எவரும் கைதுசெய்யப்படவில்லை எனவும் கூறியுள்ளனர்.