May 11

புதிய SURFACE மடிக்கணனி, 10 எஸ் இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியது மைக்றோசொப்ட்

மைக்றோசொப்ட் நிறுவனத்தின் சர்ஃபேஸ் (Surface ) மடிக்கணனி மற்றும் விண்டோஸ் 10எஸ் ஆகியன அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நியூயோர்க்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற EDU  விழாவில் இவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அப்பிள் நிறுவனத்தின் மக்புக் ஏர் சாதனத்திற்கு போட்டியாக வெளியிடப்பட்டுள்ள புதிய சர்ஃபேஸ் மடிக்கணனியில் மைக்றோசொப்டின் பாரம்பரிய கிளாம்ஷெல் வடிவமைப்பு மாற்றப்படவில்லை. எனினும், மடிக்கணனியின் வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதில், இன்டெல் கோர் i5 சி.பி.யு, 4ஜி.பி ரம் மற்றும் 128 ஜி.பி ஹார்ட் டிரைவ் மற்றும் 14 மணி நேர பட்டரி backup வழங்கப்பட்டுள்ளது. 13 இன்ச் அளவு கொண்ட புதிய சர்ஃபேஸ் மடிக்கணனியில் தொடுதிரை டிஸ்ப்ளே மற்றும் சர்ஃபேஸ் பென் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் சில்வர், கோல்ட், கிரே நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் புதிய சர்ஃபேஸ் மடிக்கணனி 999 டொலர்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று புதிய விண்டோஸ் 10எஸ் இயங்குதளம் அதிவேகமாக இயங்குவதுடன் பாதுகாப்பானதாக இருக்கும் என மைக்கிறோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் மைக்கிறோசொப்ட் செயலிகளை மாத்திமே பயன்படுத்த முடியும், அத்துடன் மைக்கிறோசொப்ட் விண்டோஸ் ஸ்டோரில் கிடைக்கும் செயலிகளை மாத்திரமே தரவிறக்கம் செய்ய முடியும்.

கல்வியை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள புதிய மடிக்கணனியில் வகுப்பறை சட் குரூப், அசைன்மென்ட் சப்மிஷன்கள் மற்றும் மொடரேஷன் அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

விண்டோஸ் 10எஸ் இயங்குதளம் வைத்திருப்போர் முழுமையான விண்டோஸ் ப்ரோ பதிப்பிற்கு புதுப்பிக்க வேண்டும். ஒருமுறை புதுப்பித்த பின்னர் மீண்டும் பின்செல்ல முடியாது. தரவிறக்கம் செய்வதற்கு 49 டொலர்கள், கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மைக்றோசொப்ட் சர்ஃபேஸ் ப்ரோ தவிர ஏசர் மற்றும் எச்.பி. உள்ளிட்ட சாதனங்களிலும் புதிய விண்டோஸ் 10எஸ் இயங்குதளம் செயற்படும்.