May 11

ஸ்பெய்னில் வேலையின்மை விகிதத்தில் சரிவு

ஸ்பெய்னில் வேலையின்மை விகிதம் கடந்த ஏப்ரல் மாதம் குறைவடைந்துள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

ஸ்பெய்ன் வேலைவாய்ப்பு மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சு கடந்த வாரம் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் சரிவடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

3.57 மில்லியனாக இருந்த வேலையற்றோர் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 281 ஆக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெய்ன் வரலாற்றுப் பதிவில் வேலையற்றோர் எண்ணிக்கையில் மிகப்பெரிய குறைப்பு இதுவாகும்.

பொதுச்சேவைகள் பகுதிகளில் வேலையற்றோர் எண்ணிக்கை கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 96,672 க்கு குறைவடைந்துள்ளது. இவையாவும் குறிப்பாக விவசாயம், தொழில்துறை மற்றும் கட்டுமான துறைகளில் காட்டப்பட்டுள்ளது.