Jan 08

வாழும்போதே வாழ்த்துவோம்!.......... திருமதி ஜெயா நடேசன் யேர்மனி

மானிட சமுதாயத்திலே தனித்துவ அடையாளங்களில் அவர்களது கலை  இலக்கியம்ரூ  எழுத்துப் பணிகள் முக்கியஇடம்பிடித்துள்ளன. காலத்தின் கட்டாயமாக சமகால நிகழ்வுகளின் பதிவுகளாக  பிரதிபலிப்புக்களாக விளங்கும்இந்தக் கலை இலக்கிய எழுத்துப் படைப்புகளை வெளிக்கொண்டுவரும் ஆற்றுப்படுத்தும் கலைஞர்கள்ரூ கவிஞர்கள்ரூ எழுத்தாளர்கள்ரூ  வாசகர்கள் போன்றோர்கள் எமது கவனத்திற்கும் கௌரவத்திற்கும் உரியவர்களாவர்.

ஏனெனில் அவகளின் கவிதைகள்ரூ  கட்டுரைகள்ரூ சிறுகதைகள்ரூ மற்றும் எழுத்துக்கள் பண்பாட்டுப் பாரம்பரியங்களைஇன்றுவரை கட்டிக்காத்து  வரலாறு படைத்து சான்றுகள் பெறுபவர்கள்தான் இக்கலைஞர்கள். இவர்களின் ஆற்றல்ரூ திறமைகளோடு தம் அயராத உழைப்பையும் கெட்டித்தனத்தையும் சேர்த்து தங்கள் பணியில் தொடர்ந்துபடுத்திக்கொண்டு சாதனை படைக்கிறார்கள்.

  நமது கலையும் இலக்கியமும் சோறுபோடாது என்று நம்மவர்கள்கூறுவதும் உண்டுதான். ஆனால் பொருளாதார ரீதியில் எந்த உதவிகள் வருமானங்கள் இல்லாமல் தமது நேரம்ரூ காலம்ரூ பணச்செலவு எல்லாம் பாராமல் அர்ப்பணிப்போடு இத்துறையில் தம்மை ஈடுபடுத்தி இரவு பகலாகஉழைக்கும் எழுத்தாளப் பெருமக்களும் நம்மிடையே இருக்கிறார்கள் என்பதும் போற்றுதலுக்குரிய விடையமாகும்.சாதாரண உளவியல் தத்துவத்தின்படி குழந்தை முதல் பெரியோர்வரையில் அனைத்து மனிதர்களுமே பாராட்டுக்காகரூ தட்டிக்கொடுத்தலுக்காக ஏங்குகிறார்கள். இவர்கள் ஏங்குகிறார்கள் என்பதைவிட எதிர்பார்க்கிறார்கள் என்பதைநாம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்விடையத்தைப் பலர் கவனித்துக்கொள்வதும் இல்லை. ஒரு சிலரைத்தட்டிக் கொடுப்பதும் சிலரை விட்டுவிடுவதும் மிக மிகத்தவறான விடையமாகும். இளையோரையோ அல்லதுபெரியோரையோ பங்குபற்றும் அனைவரையுமே தட்டிக்கொடுத்துப் பாராட்டுவது அவர்களைஉற்சாகப்படுத்துகின்றது. இவ்விடையம் அவர்களை ஊக்குவிப்பதாகவும் அமையும்.

இது சாதாரணமாக உளவியல் சார்ந்த ஒரு தேவையாகவும் இருக்கின்றது. இதனால் மனிதனும் வளர்கிறான். புதியதொருஉற்சாகமும் பெறுகின்றான்.புதியனவைகளாகப் பலத்தை தேடுதல் மூலம் தேடிப்புதியன படைக்கஉந்தப்படுகின்றான். அந்த வகையில் ஒருவனைப் பாராட்டுதல் என்னும் போது அவனுக்கு ஒரு ஊக்கமாத்திரைபோலஅமைகின்றது என்றும் கூறிக்கொள்ளலாம்.

இவற்றைப் புரிந்து கொள்ளாது பாராட்டுவதையும் தட்டிக்கொடுப்பதையும்ரூபவ் ஊக்கப்படுத்துவதையும் சிலர் தமது குறுகியகண்ணோட்டத்தின்படி பார்த்து விமர்சிக்கின்றனர். குறிப்பிட்ட விடையத்திற்கு வராமல் எல்லைகடந்துமீறிப்போய் அலட்டிக்கொண்டிருப்பவர்களும் சிலர் நம்மிடையே இருக்கவும் செய்கின்றனர். இது அவர்களின்அறியாமையையே காட்டிக்கொள்ளும் செயலாகும் எனக்கருத வேண்டியுள்ளது.

 ர்ந்தே இருப்பது புலமையும் வறுமையும் என்பதற்கொப்ப  நம் புலவர்கள் கவிஞர்கள்ரூ  கலைஞர்கள்ரூபவ்எழுத்தாளர்கள்ரூ  ஆக்க இலக்கியப் படைப்பாளிகள் ஆகிய இவர்களில் பெரும்பான்மையினர் வறுமையோடுதான்வாழ்க்கை நடாத்துபவர்கள். உதாரணமாக மகாகவி சுப்பிரமணிய பாராதியார் வறுமையோடுதான் போராடினார்.

புலமையோடு வாழ்ந்தார். ஆனால் இன்றுவரை அல்ல என்றுமே புகழோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.அவர் மறைந்தாலும் அவர் புகழ் உலகமெல்லாம் வியந்து நிற்கின்றது.யேர்மனியில் நான் அங்கம் வகிக்கும் தமிழ் எழுத்தாளர் சங்கத்தையும் சற்று எடுத்து நோக்கினால்.

யேர்மனியில் நமது மொழிக்கும் இனத்திற்கும் நீண்டகாலம் சேவை செய்தவர்களை 2014ம் ஆண்டில் ஐந்துபேரையும் 2017 அக்டோபர் மாதம் ஐந்து பேரையும் கௌரவித்திருக்கின்றது. அவர்கள் வாழும்போதேகௌரவிக்க வேண்டும் என்ற உயர்ந்த பண்பால் நேசிப்போடு அன்போடு விழா எடுத்துப் பாராட்டிக்கௌரவித்தது சிறப்பான விடையம் என்றே நான் கருதுகிறேன். இது ஒரு முன்மாதிரியான செயற்பாடாகவேஎன்னால் கணிக்கமுடிந்துள்ளது. இப்படியாக வருடாவருடம் இந்தக் கலை உலக எழுத்துலக நாயகர்களை சரியாக இனங்கண்டுஅவர்களுக்கு விழா எடுத்துரூபவ் கௌரவித்துப் பாராட்ட வேண்டும் என்பது எனது அவாவாக இருக்கின்றது. நான்மட்டுமல்ல எல்லோரும் ஒன்று சேர்ந்து இப்படியான நற்பணிகளை முன்னெடுத்து இன்புற்று வாழ்வோமாக!....

-நன்றி-