May 11

சம்பூர் ஆடை தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகளை பார்வையிட்டார் கிழக்கு முதல்வர்

கிழக்கு முதலமைச்சரின் எண்ணக்கருவுக்கமைய உருவாக்கப்பட்டு வரும் சீதனவௌி ஆடைத் தொழிற்சாலையை பார்வையிடுவதற்கு கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சம்பூருக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதனபோது சம்பூரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஆடைத் தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகள் தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் ஆராய்ந்தார்,

கிழக்கு முதலமைச்சரின்  இந்த பயணத்தின் போது  கிழக்கு முதலமைச்சின் செயலாளர் யூஎல்ஏ அசீஸும் இணைந்து கொண்டார்,

கிழக்கிலிருந்து பெண்கள் வௌிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வதை நிறுத்த வேண்டும் என்ற கிழக்கு முதலமைச்சரின் கொள்கைக்கு அமைவாக கிழக்கில் ஆடைத் தொழிற்சாலைகளை நிர்மாணிக்கும் திட்டத்தை கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் முன்னெடுத்து வருகின்றார்,

கிழக்கின் அம்பாறை மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களையும் மையப்படுத்தி ஆடைத் தொழிற்சாலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன் இதன் முதற்கட்டமாக ஏறாவூரில் ஆரம்பிக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலையில் தற்போது பல இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்புக்களை பெற்றுள்ளதுடன் சம்மாந்துறை மற்றும் சீதனவௌி பகுதிகளில் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன் இந்தத் திட்டம் கிழக்கின் மேலும் பல பகுதிகளுக்கு விஸ்தரிக்கப்படவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.