May 11

சர்வாதிகாரி கிம் ஜாங் ஆட்சி வட கொரியாவில் கவிழவேண்டும்: ஓவியரின் வேண்டுகோள்

வட கொரியாவில் கிம் ஜாங் ஆட்சி கவிழ அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அந்நாட்டுடன் போரிட வேண்டும் என பிரபல ஓவியர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வட கொரியாவை சேர்ந்தவர் Song Byeok. பிரபல ஓவியரான இவர் தன்னுடைய நாட்டில் நடக்கும் கொலைகார ஆட்சியை சகித்து கொள்ள விரும்பாமல் கடந்த 2002ல் அவர் தென் கொரியாவுக்கு தப்பி சென்றுள்ளார்.

தற்போது அந்நாட்டில் வாழ்ந்து வரும் Song கூறுகையில், வட கொரியா அமைதியாகவும், அந்நாட்டு மக்கள் சுதந்திரமாகவும் இருக்க அந்நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுக்க வேண்டியது அவசியமாகும்.அப்போது தான் கிம் ஜாங்கின் சர்வாதிகார ஆட்சி கவிழும் என கூறியுள்ளார். போர் தொடங்கினால் கிம் ஜாங்குக்கு ஆதரவாக போரிட பலர் வர மாட்டர்கள் எனவும் Song தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த இளம் வயதில் கிம் ஜாங்கின் செயல் என்னை கவலையடைய செய்கிறது.

எதிர்பாராத விடயத்தை செய்வதே அவரின் குணமாக உள்ளது. அவர் தென் கொரியா மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என அவர் கூறியுள்ளார்.

வட கொரியாவின் சர்வாதிகாரம் தன் வாழ்நாளுக்குள் முடிவுக்கு வரும் என நம்புவதாக கூறியுள்ள Song, 80களில் நடந்த மாதிரி கொரிய போர் மீண்டும் நடக்க வாய்ப்புள்ளதாகவும் அப்போது போலவே பலர் தங்கள் வாழ்க்கையை மீண்டும் இழப்பார்கள் எனவும் Song கூறியுள்ளார்.