இல்-து-பிரான்சுக்குள் மேலதிகமாக 4600 அவசரகால தங்குடம்!
இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்குள் மேலதிகமாக 4,600 பேருக்கான குளிர்கால அவசர தங்குமிடங்கள் திறக்கப்பட உள்ளது.
மேலதிக தங்குமிடங்கள் அமைப்பதற்குரிய வேலைகளில் பிரெஞ்சு அரசு ஈடுபட்டுள்ளது. நாடு முழுவதும் 140,000 பேர் தங்கக்கூடிய தங்குமிடங்கள் அமைக்கப்பட உள்ளன. இது கடந்த வருடத்தைக் காட்டிலும் 20 வீதம் அதிகமான எண்ணிக்கையாகும்.
இத்தகவல்கள் நேற்று வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது. இல்-து-பிரான்சுக்குள் 4,600 பேருக்கான தங்குமிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் இது 3,800 தங்குமிடங்களாக இருந்தது.
கடந்த நவம்பர் மாதத்தில் அவசர கால தங்குமிடங்களுக்கு 35,380 பேர் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் 5,900 பேர்கள் மாத்திரமே தங்குமிடங்களில் தங்கியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.