May 11

கொலந்தொட்ட வெசாக் வலயத்தை ஜனாதிபதி திறந்துவைத்தார்

சுவர்னசிறி கொலந்தொட்ட வெசக் வலயம் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் திரு கரங்களினால் நேற்று (10) திறந்துவைக்கப்பட்டது. காலிமுகதிடலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள உலகிலுள்ள முதலாவது லேசர் வெசாக் அலங்காரப்பந்தலையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.

அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி அவர்களிற்கு நினைவுச்சின்னமொன்றும் கையளிக்கப்பட்டது. துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் செயலாளர் எல்.பி.ஜயம்பதி இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக்க ரணதுங்க உள்ளடங்கலான அதிதிகள் பலர் கலந்துக்கொண்டார்கள்.

அலங்காரப்பந்தல் திறந்துவைக்கப்பட்டதன் பின்னர் உரையாற்றிய அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டதாவது இலங்கை துறைமுக அதிகார சபையானது அனைத்து மக்கள் இனத்தையும் நன்கு வெளிப்படுத்துகின்ற நிறுவணமாகும் என்றார்.

நாடென்ற வகையில் முன்னோக்கிச் செல்கையில் சாதி குல மத பேதங்கள் இன்றி ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டிய முக்கியத்துவம் பற்றி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க எடுத்துரைத்தார்.

' நாம் கடந்த டிசெம்பர் மாதத்தி;ல இப்பிரதேசத்தில் உலகிலுள்ள மிகப்பெரிய நத்தார் மரத்தை நிர்மாணித்தோம். நாம் இன்று உலகிலுள்ள முதலாவது லேசர் வெசாக் அலங்காரபந்தலை திறந்துவைத்தோம்.

எங்களுடைய துறைமுக அதிகார சபை என்பது சிங்களம் தமிழ் முஸ்லீம் பறங்கியர் ஆகிய அனைத்து மக்கள் இனத்தையும் கொண்டுள்ள நிறுவணமாகும்.அதேப்போல் பௌத்த முஸ்லீம் இந்து கத்தோலிக்க ஆகிய மக்கள் இனங்கள் உள்ள நிறுவணமாகும்.

இவர்கள் அனைவரும் சகோதரத்துவதத்துடனும் ஒத்துழைப்புடனும் பணியாற்றுகின்றார்கள். இது இலங்கைக்கு சிறந்த உதாரணமாகுமென ...' அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

 துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் வழிக்காட்டலிற்கமைவாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் பௌத்த சங்கம் ஏற்பாடுச் செய்த கொலந்தொட்ட வெசாக் வலயம் நாளையுடன் நிறைவடையும்.

கொழும்பு சைத்திய மாவத்தை மற்றும் துறைமுக வளாகத்தை மையப்படுத்தி நடைப்பெறுகின்ற இவ்வலயத்தின் முக்கிய அங்கமாக காலிமுகதிடலில் காட்சிப்படுத்தப்படுகின்ற லேசர் வெசாக் பந்தல் திகழ்கின்றது.

இவ்வலங்கார பந்தல் மூலமாக புத்தரின் வாழ்க்கை வரலாறு எடுத்துரைக்கப்படுகின்றது. ஜேர்மன் நாட்டு தொழி;லநுட்ப முறையை பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ்வலங்கார பந்தலை பேராசிரியர் பிரபாத் சந்திம உக்வத்த வடிவமைத்துள்ளார். இதற்கான பின்னனி இசையை விமலஜீவ தொடம்வத்த மற்றும் திமுத்து சிந்தக்க ஆகியோர் அமைத்துள்ளார்கள்.