May 11

வித்தியாவுக்கு நீதி கேட்டு இன்று ஊர்வலம்

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை வழக்கினை அரசியல் நோக்குடன் கொழும்புக்கு மாற்றம் செய்வதை கண்டித்தும் மீளவும் யாழ் மேல் நீதிமன்றத்திற்கே வழக்கினை பாரப்படுத்தக்கோரியும் பொதுமக்களால் இன்று அமைதி கண்டன ஊர்வலமொன்று ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

குறித்த கண்டன ஊர்வலம் புங்குடுதீவு குறிகாட்டுவான் பகுதியில் இன்று மாலை 3.00 மணியளவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.