May 11

பொலிஸ் அதிகாரிகள் மீது சூடு பொலிஸ்மா அதிபரிடம் விளக்கம் கோரும் சாகல

பிலியந்தலையில் அரச வங்­கிக்கு அரு­கில் சுற்­றி­வ­ளைப்­புக்­கா­கச் சென்ற பொலிஸ் போதைத் தடுப்­புப் பிரிவு அதி­கா­ரி­கள் குழு மீது மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிச் சூட்டுச் சம்­ப­வம் தொடர் பில், சட்­டம் ஒழுங்கு மற்­றும் தெற்கு அபி­வி­ருத்தி அமைச்­சர் சாகல ரத்­நா­யக்க பொலிஸ்மா அதி­பர் பூஜித் ஜய­சுந்­த­ர­ வி­டம் விசா­ரணை அறிக்கை கோரி­யுள்­ளார். 

எவ்வித முன்னேற்பாடுகளும் இன்றி இது போன்ற சுற்றிவளைப்புக்கு செல்வதற்கான தேவை உட்பட சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை மூன்று நாள்களுக்குள் தனக்கு வழங்குமாறு அமைச்சர் சாகல ரத்நாயக்க பொலிஸ்மா அதிபரிடம் கோரியுள்ளார்.

அறிக்கையைத் தயார் செய்வதற்காக மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லத்தீப்பை பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நியமித்துள்ளார்.

பிலியந்தலையில் வங்கிக்கு அருகாமையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.