May 11

ஆடி, பாடி 120 நிமிடங்கள் இசை நிகழ்ச்சி நடத்திய ஜஸ்டின் பீபர்!

உலகப்புகழ்பெற்ற பாப் இசை பாடகர் ஜஸ்டின் பீபர் நேற்று (10.05.17) அதிகாலை 2 மணிக்கு மும்பை விமானம் நிலையம் வந்தடைந்தார்.

இந்தியாவில் முதல் முறையாக நிகழ்ச்சி நடத்த வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜஸ்டின் பீபரின் ரசிகர்கள் மூன்று நாட்களாக மும்பையில் காத்துகிடந்தனர்.

சல்மான் கானின் பாதுகாவலர் ஷெரா மற்றும் நவி மும்பை காவல்துறையின் பாதுகாப்புடன் பாடகர் ஜஸ்டின் பீபர் வசதி வாய்ப்பற்ற குழந்தைகளுக்கு 100 டிக்கெட்டுகளை வழங்கினார்.

மால் ஒன்றில் காபி அருந்திவிட்டு ரசிகர்களுக்கும் ஹாய் சொல்லிவிட்டு டிஒய் பாடீல் மைதானத்தை அடைந்தார்.

இந்தியாவை சேர்ந்த டிஜே சார்டெக், டிஜே சாடேன் ஆகிய இருவரும் பெர்பார்ம் செய்தனர். இந்த நிகழ்ச்சியை நடிகையும், மாடலுமான எலாரிகா ஜான்சன் தொகுத்து வழங்கினார். மூன்றாவதாக டிஜே அலன் வால்கர் பெர்பார்ம் செய்தார். அதன்பின்னர் ஜஸ்டின் பீபருக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

வெள்ளை நிற டி-ஷர்ட் மற்றும் கருப்பு நிற ஷார்ட்ஸ் உடன் ஜஸ்டின் பீபர் மேடைக்கு வந்து “ஹலோ இந்தியா” என்று தனது பெர்பார்மன்ஸை தொடங்கினார்.

“வேர் ஆர் யு நவ்” எனும் பாடல் மூலம் இசை நிகழ்ச்சியை தொடங்கிய பீபர் மொத்தம் 120 நிமிடங்கள் 20 பாடல்கள் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். மேடையில் நடனம் ஆடி, ரசிகர்களுடன் பேசி என மிகவும் கோலாகலமாக நிகழ்ச்சி நடைபெற்று முடிந்துள்ளது.