May 11

பாகுபலி இல்லாமல் பிரம்மாண்டத்திற்கு பெயர் பெற்ற இன்னொரு தமிழ்ப்படம் இருக்கிறது!

எஸ்எஸ் ராஜமௌலியின் பாகுபலி இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக பாகுபலி பற்றிய பேச்சு தான்! வசூல், விமர்சனம் என்று எல்லா சாதனைகளையும் அடித்து நொறுக்கி பாகுபலி கம்பீரமாக வெற்றி நடைபோடுகிறது.

எல்லா மாநிலங்களிலும் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்களாம்.

அந்த அளவிற்கு எல்லா மாநிலங்களிலும் வரவேற்பும், வசூலும் கிடைத்துள்ளது. பாகுபலிக்கு முன்பு ஒரே ஒரு தமிழ்ப்படம் தான் இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் இந்த அளவிற்கு வரவேற்பை பெற்றதாக கூறப்படுகிறது.

1948ஆம் ஆண்டு வெளியான சந்திரலேகா எனும் தமிழ்ப்படம் தான் பாகுபலி போன்று இதற்கு முன்பு வரவேற்பு பெற்றது. மிகவும் பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படத்தை வாசன் இயக்கியிருந்தார்.