May 11

குடியுரிமைச் சட்டமூலத்தில் ஏற்படுத்தப்பட்ட திருத்தங்களுக்கு செனட் சபை அங்கீகாரம்

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பல சட்டச் செயன்முறைகளிற்கு உட்பட்டதன் பின்னர்கனேடியக் குடியுரிமைச் சட்ட்த்திற்கான திருத்தங்களை செனட் சபை அங்கீகரித்துள்ளதுலிபரல் அரசினால் முன்வைக்கப்பட்ட இத்திருத்தங்கள் குடியுரிமையை திரும்பப்பெறல்சிறுவர் உரிமைகள் மற்றும் மொழித்தகைமை ஆகியன தொடர்பான திருத்தங்களை உள்ளடக்கியதாகும்.

சட்டமூலம் C-6 (Bill C-6) என அழைக்கப்படும் இந்தச் சட்டமூலம் செனட் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது ஆதரவாக 45 வாக்குகளும்எதிராக  29 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதுபழமைவாத அரசினால் அறிமுகம் செய்யப்பட்ட குடியுரிமை தொடர்பான பல சட்டவிதிகள் இதன் மூலம் இரத்துச் செய்யப்பட்டன.

இச்சட்டமூலம் இனி பாராளுமன்றத்தின் மீளாய்வுக்குச் சமர்ப்பிக்கப்படும் போதுபாராளுமன்ற உறுப்பினர்கள் செனட் சபையினால் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை அங்கீகரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ முடியும்அரசு,இத்திருத்தங்களுக்கு எவ்வாறு பதிலளிக்கப்போகிறது என்பது தொடர்பாக இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.

இச்சட்டமூலம் அங்கீர்ரிக்கப்பட்டு சட்டமாக்கப்படும் பட்சத்தில்,டொரொன்டொ நகரில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ள இருந்தார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள சகரியா அமாரா (Zakaria Amara) போன்றோர்களது பறிக்கப்பட குடியுரிமை மீண்டும் வழங்கப்படும் சாத்தியம் உள்ளது.