Dec 30

மீண்டும் தலைதூக்கும் பயங்கரவாதம்! - தாக்குதல் நடத்த திட்டமிட்ட இருவர் கைது!

பிரான்சில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட இளம் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பயங்கரவாத தடுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதம் தொடர்பாக நீண்ட நாட்களின் பின்னர் மேற்கொள்ளபடும் கைது நடவடிக்கை இதுவாகும்.கடந்த வாரம் பரிஸ் மற்றும் லியோன் ஆகிய நகரங்களில் இருவரும் கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒருவருக்கும் எவ்வித நேரடி தொடர்பும் இல்லையெனவும், ஆனால் குறித்த இருவரும் இணையத்தளமூடாக இஸ்லாமியதேச பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், இருவரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் Direction générale de la sécurité intérieure (DGSI) தகவல் வழங்கியுள்ளனர்.

இளைஞன் டிசம்பர் 22 ஆம் திகதி லியோனில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளான். இராணுவத்தினர் வசிக்கும் பகுதியில் தாக்குதல் நடத்த குறித்த இளைஞன் திட்டமிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 18 ஆம் திகதி 19 வயதுடைய பெண் பரிசில் கைதுசெய்யப்பட்டுள்ளாள்.தேடுதல் வேட்டையில் எவ்வித ஆயுதங்களும் கிடைக்கவில்லை எனவும், விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அறியமுடிகிறது.