Dec 29

பத்தகலோன் தாக்குதல் - தொலைக்காட்சி திரைப்படத்துக்கு எதிராக குவிந்த 32,000 குற்றக்கடிதங்கள்!

நவம்பர் 13 பரிஸ் மற்றும் அதன் புறநகர்களில் இடம்பெற்ற பயங்கரவாத் தாக்குதலைத் தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியான France 2 ஒரு ஆவண தொலைக்காட்சி திரைப்படம் ஒன்றை எடுத்திருந்தது.

தற்போது அதுவே பிரச்சனைக்குரிய விடயமாக மாறியுள்ளது.பத்தகலோன் அரங்கில் Claire Peltier என்பவர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டிருந்தார்.

அவரின் மனைவி கடந்த நவம்பர் மாதம் ஒரு குற்றக்கடிதத்தினை பகிர்ந்திருந்தார். எங்களது வலியை தொலைக்காட்சியினர் வியாபாரமாக்கின்றனர் என அக்குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அப்போதிலிருந்து பலரின் கையெழுத்துக்கள் சேர ஆரம்பித்து, தற்போது 32,000 கையெழுத்துக்கள் சேர்ந்துள்ளன.Claire Peltier தெரிவிக்கும் போது, 'நவம்பர் தாக்குதலின் வலியை வியாபாரமாக்கவேண்டாம்.

எங்களை அமைதியாக இருக்கவிட்டாலே போதும்!' என மிக ஆதங்கமாக குறிப்பிட்டார். France 2 தொலைக்காட்சி தயாரித்திருந்த இந்த திரைப்படம் மிகவும் புண்படுத்துகிறது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.