May 10

நீதிபதி கர்ணனுக்கு சிறை தண்டனை விதித்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது - திருமாவளவன்

நீதிபதி கர்ணனுக்கு சிறை தண்டனை விதித்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நீதிபதியை எப்படி கைது செய்ய உத்தரவிட முடியும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில், நீதிபதி கர்ணனுக்கு சிறை தண்டனை விதித்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மேலும், ”நீதிபதி கர்ணனை மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறுவது கண்டனத்திற்குரியது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் கர்ணனின் செயல் ஜனநாயகத்தை பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது” என்றார். 

முன்னதாக, நீதிபதி கர்ணனை கைது செய்ய காளஹஸ்திக்கு மேற்கு வங்க தனிப்படை போலீசார் புறப்பட்டு சென்றனர். அங்கு வைத்து அவரை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இன்னும் சில மணி நேரத்தில் அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.