May 10

அஜீத்துக்காக காத்திருக்கிறார் அரசியல் தலைவரின் மகன்!!

நடிகர் அஜீத்திடம் இருந்து வரும் நல்ல பதிலுக்காக காத்திருக்கிறேன் என்று தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

பல தயாரிப்பாளர்கள் எப்போதுமே முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது அவர்களின் கனவாக இருக்கும். அந்த கனவை நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், சூர்யா என பலரை வைத்த தன்னுடைய கனவை நிறைவேற்றிக் கொண்டார் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்.

இவர் அண்மையில் ஒரு பேட்டியில் அஜீத்துடன் எப்போது படம் என கேட்டபோது கூறியதாவது, ‘‘அஜீத் சார் இப்போது கூப்பிட்டாலும் உடனே படம் தயாரிக்க தயார், எல்லாம் கைக்கூடி வரவேண்டும்.

இதுகுறித்து அஜீத்திடம் ஏற்கெனவே பேசியிருக்கிறேன், அதற்கு அவர் சொன்ன பதில் நேரம் வரும் போது கூப்பிடுகிறேன் என்றார். அவரிடம் இருந்து வரும் நல்ல பதிலுக்காக காத்திருக்கிறேன். நல்ல பதில் வந்தவுடன் படத்தை உடனே தொடங்கிவிட வேண்டியது தான்’’ என்றார்.