May 10

திருமணமான தமிழ் தயாரிப்பாளருடன் மலையாள நடிகை கசமுசா?

கணவரை பிரிந்துவிட்டதாக கூறப்படும் மலையாள நடிகைக்கும், தமிழ் தயாரிப்பாளருக்கும் இடையே கசமுசா இருப்பதாக மலையாள திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது.
மலையாள சினிமாவில் மின்னாமுனுங்கு படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் நடிகை சுரபி லட்சுமி. கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் கையால் விருது பெற்றார்.

தேசிய விருது பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 2014ம் ஆண்டு சுரபிக்கு கேரளாவின் குருவாயூரில் உள்ள கோவில் ஒன்றில் வைத்து திருமண நடந்தது. தற்போது நடிப்போடு சேர்த்து முனைவர் பட்டம் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மலையாள பத்திரிக்கை ஒன்றுக்கு சுரபி கூறியதாவது: தன் வீட்டில் பாட்டி, அம்மா, சகோதரர்கள் ஆகியோர் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், கணவரைப் பற்றி மட்டும் எதுவும் பேசவில்லை.

இதற்கு முன்னதாக கூட அவர், தனக்கு திருமணமானது பற்றியோ, அவருடைய கணவர் பற்றியோ எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக தனக்கு திருமணம் ஆனதை சுரபி லட்சுமி மறைக்கிறாரா என்று மலையாள பத்திரிக்கையில் செய்தி வெளியானது.

இந்நிலையில், சுரபி தனது கணவரை பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதோடு தமிழ் சினிமா பட தயாரிப்பாளருக்கும், சுரபிக்கும் இடையில் கசமுசா இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

அந்த தயாரிப்பாளருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போவாவது சுரபி, அவருடைய கணவர் பற்றி தகவல் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.