Dec 28

சுனாமி பேரலையினால் உயிரிழந்த மக்களின் 13ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு,

2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாளை எவராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது, உலகையே நிலைக்குலையச் செய்த ஆழிப்பேரலையின் ஊளித்தாண்டவம் அரங்கேறிய நாள்.

அந்த கோரத்தாண்டவ சுனாமி பேரலையினால் உயிரிழந்த மக்களின் 13ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ், செவ்றோன் நகரசபை இணைந்த ஏற்பாட்டில் 51 Av du Général Leclerc 93270 Sevran நகரசபை மண்டபத்தில் 26.12.2017 மாலை 4.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.

பிரதான பொதுச் சுடரை தமிழர் புனர்வாழ்வுக் கழக பிரான்ஸ் உபதலைவர் திரு. மு. கருணைராஜன் ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து தாயக விடுதலைக்காக போராடி வீரமரணத்தைத் தழுவிக்கொண்ட மாவீரர்களையும், போரினாலும் இயற்கை அனர்த்தங்களாலும் சாவடைந்த மக்களையும், பிரான்சில் பயங்கரவாத தாக்குதலினால் சாவடைந்த மக்களையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதலால் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவுச்சுடரினை ரான்சி நகரமன்ற உறுப்பினர் திரு. அலன் ஆனந்தன் அவர்கள் ஏற்றி வைத்தார். முன்னாள் பிரான்ஸ் நாட்டு தேசிய இராணுவ வீரர்கள் நலன் பேண் சங்க தலைவர் ஆழிப்பேரலையில் உயிரிழந்த அத்தனை உறவுகளுக்குமான நினைவுச்சுடரினை ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து நாடுகடந்த அரச பிரதநிதிகள், தமிழ்ச்சங்கப் பிரதிநிதிகள், தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வருகை தந்த மக்கள் அனைவரும் நினைவுச்சுடரினை ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தினர்

நினைவுரையினை உபதலைவர் திரு. மு. கருணைராஜன், தமிழர் புனர்வாழ்வுக்கழக பிரான்ஸ் பேச்சாளர் திருமதி. சுபா குருபரன் ஆகியோர் நிகழ்தினர். செல்வி. தெய்வேந்திரன் கரிகரனி, செல்வி. தர்மராஜா கர்ஜனா அவர்களின் சுனாமி நினைவுப்பகிர்வும், கலைஞர் கணேஷ், திரு. சுதர்சன் அவர்களின் கவிதையும், பாடகர் திரு. இந்திரன் குழுவினரின் இசைமாலை நிழ்வும் இடம்பெற்றது.

ஒலி அமைப்பை சூப்பர் டியூனர் இசைக்குழு ஞானா, தொழில்நுட்ப உதவி திரு. அருள், நிழல் படப்பிடிப்பை யாழ் தீபன், நிகழ்ச்சி தொகுப்பை திரு. அருள்மொழித்தேவன். செல்லி. மதுரா, செல்வன். கபினாத் ஆகியோர் வழங்கினர்.