May 10

டெங்கு நோயின் காரணமாக இளைஞன் உயிரிழந்துள்ளார்.

டெங்கு நோயின் தாக்கம் காரணமாக நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்ல 19 வயது நிரம்பிய இளைஞன் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

கிளிநொச்சியை சேர்ந்த எம். சதீஸ்குமார் பாரதிபுரம் விஸ்வமடு  என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

விஸ்வமடுவைச் சேர்ந்த குறித்த இளைஞன் கடந்த ஒரு வாரமாக காச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவருக்கு அவசர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்த இளைஞனின் மரணத்திற்கு டெங்கு நோயின் தாக்கம் காரணம் என் கண்டறியப்பட்டுள்ளது. 

குறித்த இளைஞனின் மரணம் தொடர்பான மரண விசாரணையின் பின்னர் உடலம் உறவுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.