May 10

முல்லைத்தீவின் வறுமை நிலைக்கு இராணுவமே காரணம்!

வளமான இடங்களை படையினர் சுவிகரித்துள்ளமையினால் முல்லைத்தீவு மாவட்டம் இலங்கையிலேயே மிகவும் வறுமையான மாவட்டமாக மாறியுள்ளது என்று வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடமாகாண சபையின் நேற்றைய அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்காது, ஐனாதிபதி வறுமை ஒழிப்பு செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த முல்லைத்தீவிற்கு பயணம் செய்யவுள்ளார்.

எமது வளமான காணிகள் தமிழ் மக்களிடம் வழங்கப்பட்டால் வறுமை ஒழிப்பு செயற்றிட்டம் தேவையில்லை. அரசாங்கத்தின் நிதி உதவிகளும் எமக்கு தேவை இல்லை.

 முல்லைத்தீவு மாவட்டத்தில் வளமான நிலங்களை படையினர் தங்கள் கட்டிப்பாட்டில் வைத்திருக்கின்றமையினாலேயே முல்லைத்தீவு மிக வறுமையான மாவட்டதாக காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.