May 10

இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்திற்கு வரி விலக்கு

பேரீச்சம்பழத்தின் வரியை அர­சாங்கம் அதி­க­ரித்­துள்­ள­தாக ஜே.வி.பி.யின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்­துன்­நெத்தி அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். பேரீச்­சம்­ப­ழத்தின் மீதான வரி தொடர்­பாக உண்­மைக்கு புறம்­பாக அவர் வெளி­யிட்­டுள்ள கருத்து நல்­லாட்­சிக்கு வாக்­க­ளித்த முஸ்­லிம்கள் மத்­தியில் சல­ச­லப்­பையும் சர்ச்­சை­யையும் சந்­தே­கத்­தையும் கிளப்­பி­யி­ருக்­கி­றது என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  முஜிபுர் ரஹ்மான் குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில், 

அர­சாங்கம் பேரீச்­சம்­ப­ழத்தின் மீது புதி­தாக 60 ரூபா வரி அற­வி­டப்­போ­வ­தாக தவ­ றான ஒரு தக­வலை அவர் வெளி­யிட்டு மக்­களை தவ­றாக வழி­ந­டத்த முயற்சி மேற்­கொண்­டுள்ளார். 

கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பேரீச்­சம்­ப­ழத்தின் மீதான இறக்­கு­மதி வரி அதன் பல தரப்­பட்ட தரத்­துக்­கேற்ப  வித்­தி­யா­ச­மாக அற­வி­டப் ­பட்­டி­ருந்­தது. அன்று ஆகக் குறைந்த தரத்­தி­னை­யு­டைய பேரீச்சம்பழம் கிலோ ஒன்­றுக்­கான வரி 130 ரூபா­வா­கவே அறவி­டப்­பட்­டது. 

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரவு – செலவு திட்­டத்தின் போது இந்த வரி 130 ரூபா­விலி­ருந்து  60 ரூபா­வாக குறைக்­கப்­பட்­டது. இது தொடர்­பான 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட வியா­பாரப் பண்ட அற­வீட்டுச் சட்­டத்தின் கீழ்  இந்த வரி அறி­வித்தல் 6 மாத காலத்­திற்கு மட்­டுமே செல்­லு­ப­டி­யாகும். 

2017 ஆம் ஆண்டு மே மாதம் வரை­யோடு நிறைவுபெறும் இந்த வரியின் காலக்­கெ­டுவை அடுத்த ஆறு மாதங்­க­ளுக்கு நீடிக்கும் அங்­கீ­கா­ரத்தைப் பெறும் வகை­யி­லேயே கடந்த வாரம் இது பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டது. 

குறைக்­கப்­பட்ட மேற்­படி 60 ரூபா வரியை அடுத்த ஆறு மாதங்­க­ளுக்கு நீடிக் கும் நட­வ­டிக்­கை­யா­கவே அன்று பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

அது தவிர பேரீச்சம்பழம் மீதான எவ்­வித புதிய வரி­களோ அதி­க­ரிப்­பு­களோ அறி­விக்­கப்­ப­டாத நிலையில்  இந்த உண்­மையை மூடிமறைத்த ஜே.வி.பி. பாரா­ளு­மன்ற உறுப்பினர் ஹந்­துன்­நெத்தி, முஸ்­லிம்­களை திசைதிருப்பும் நோக்­கத்­தோடு முற்­றிலும் பொய்­யான தக­வலை வழங்கி மக்­களை தவ­றான பக்கம் திசை திருப்பும் மோச­மான அர­சி­யலை மேற்­கொண்­டுள்ளார்.

புனித ரமழான் மாதத்தை முன்­னிட்டு இல­வ­ச­மாக பகிர்ந்­த­ளிக்கும் நோக்கில் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து  அன்­ப­ளிப்­பாகக் கிடைக்கும் பேரீச்­சம்­ப­ழங்­க­ளுக்­கு­ரிய இறக்­கு­மதி வரியை கூட அர­சாங்கம் முற்­றாக நீக்­கி­யி­ருப்­ப­துடன், அதற்­கான வரியை அர­சாங்­கமே இது­வ­ரை­யிலும் செலுத்­தியும் வரு­கி­றது.

பொய் வதந்தி பரப்பி மக்­களைக் குழப் பும் ஜே.வி­.பி.யின் இந்த நிலைப்­பாடு நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீதான சிறு­பான்மை மக்­களின் நம்­பிக்­கையை சீர்­கு­லைக்கும் நட­வ­டிக்­கை­யாகும். 

முஸ்­லிம்கள் மீதான அதீத அக்­க­றையில் இருப்­பது போன்ற ஒரு போலி­யான நிலையை ஜே.வி.பி. காட்­டிக்­கொள்ள முயற்சி செய்­கி­றது. தோல்­வி­ய­டைந்த அர­சியல் சக்­தி­களின் பின்­ன­ணியில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக இன­வாத சக்­தி­களின் செயற்­பா­டுகள் இடம்­பெற்­று­வரும் நிலையில் அவற்­றிற்கு எதி­ராக வாய் திறக்­காமல் இருக்கும் ஜே.வி.பி. பேரீச்சம்பழ விவ­கா­ரத்தை மட்டும் பொய்­யாக பெரி­து­ப­டுத்தி காட்­டு­வதன் மூலம் நல்­லாட்­சியின் மீது முஸ்­லிம்­களின்  அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முயற்சி செய்­துள்­ளது.

சிறு­பான்மை மக்­க­ளுக்கு ஆத­ர­வாக குரல் ­கொ­டுப்­ப­தாக காட்­டிக்கொள்ளும் ஜே.வி.பி., வில்­பத்து விவ­காரம், இறக் ­கா­மத்தில் முஸ்­லிம்­களின் காணி மீதான அத்துமீறல், சிறுபான்மை மக்கள் வாழும் பிரதேசங் களில் இடம்பெறும் மத ரீதியிலான அடக்குமுறை போன்ற  விவகாரங்களில் மௌனம் சாதித்துக்கொண்டு முஸ்லிம் களின் உரிமைகள் பற்றி கதையளப் பது  நல்லாட்சி அரசாங்கத்திற்கு அசௌக ரியத்தை ஏற்படுத்தவும் தமது சுயநல அரசியல் நோக்கங்களை குறுக்கு வழியில் அடையும் நோக்கத்திலுமேயாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.