Mar 07

இரண்டாவது போட்டில் இந்தியா வெற்றி

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் பெங்களுரில் நடைபெற்றிருந்தது

முதலில் துடுப்பெடுத்தாடிய  இந்திய அணி முதல் இன்னிங்ஸில் நெதன் லயனின் சுழலில் சிக்கி 189 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் லோகேஸ் ராகுல் 90 ஓட்டங்களை அதிகமாக பெற்றுக்கொடுத்தார்.நெதன் லயன் எட்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.  

87 ஓட்டங்கள்  பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணிக்கு புஜாரா (92), ரகானே (52), லோகேஷ் ராகுல் (51) ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க 274 குவித்தது.

இந்திய அணி சார்பில் ஜடேஜா 6 விக்கெட்டுக்கள் கைப்பெற்றினார். 

அவுஸ்திரேலியா 188 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.

ரென்ஷா (05) ஸ்டீவ் ஸ்மித் (28) வோர்னர் (17) ஷேன் மார்ஷ் (09) வரிசையாக அரங்கு திரும்பவம் அவ்வணி 112 ஓட்டங்களையே பெற்றது.  இதனால் இந்தியா 75 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. அஸ்வின் 6 விக்கெட்டுக்கள் அள்ளினார். 

இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-1 என சமநிலைப் படுத்தியுள்ளது.

இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடித்த லோகேஷ் ராகுல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.