May 10

ஐ.பி.எல்.திருவிழா; பஞ்சாப் 'திரில்' வெற்றி

ஐ.பி.எல் திருவிழாவின்  49ஆவது போட்டியா கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையில் மொகாலியில் நடைபெற்றது.

பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது செய்தது.  

சொந்த மைதானத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் களம் இறங்கிய பஞ்சாப் அணி சார்பில் மார்ட்டின் குப்தில், வோரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 

வோரா 16 பந்தில் 25 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், கப்தில் 16 பந்தில் 12 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த ஷேன் மார்ஷ் 11 ஓட்டத்தில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். 

4ஆவது வீரராக களம் இறங்கிய சகா 38 ஓட்டங்களும் அடுத்து வந்த மேக்ஸ்வெல் 25 பந்தில் 44 ஓட்டங்களும் எடுக்க, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ஓட்டங்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து 168 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. துவக்க வீரர்களான எஸ்.பி நரெய்ன் 18 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார். பின் கவுதம் காம்பீர் 8 ஓட்டங்களையும்;, உத்தப்பா ஓட்டமெதனையும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். 

ஒருபக்கம் விக்கெட்கள் சரிந்தாலும் மற்றொரு துவக்க வீரரான சி.ஏ.லின் அதிரடியாக விளையாடி 84 ஓட்டங்களைக் குவித்தார். மற்ற வீரர்கள் ஓட்டங்களை குவிக்க திணறியதை தொடர்ந்து கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 153 ரன்களை மட்டுமே குவித்தது. 

பஞ்சாப் அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய திவேதியா, எம்.எம். ஷர்மா தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர்.  கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றுள்ள பஞ்சாப் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 

அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெரும் பட்சத்தில் பஞ்சாப் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.