Dec 22

மூன்று உலக சாதனைகளை முறியடிக்கும் வகையில் ஜெர்மனியில் புதிய ரோப் கார் சேவை

மூன்று உலக சாதனையைகளை முறியடிக்கும் வகையில் ஜெர்மனியில் புதிய ரோப் கார் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனி நாட்டின் மிக உயரிய மலையாக கருதப்படும் zugspitze மலையில் ரோப் கார் சேவை தொடங்குவதற்கான ஆறு ஆண்டுகளுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அதன்படி திட்டமிடுதல், பொருட்கள் வாங்குதல், கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் கடந்து ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் அனைத்து பணிகளும் முழுமையாக முடிவுற்ற நிலையில் நேற்று முதல் சேவை தொடங்கப்பட்டுள்ளது.  

பள்ளத்தாக்கில் இருந்து 1,945 மீட்டர் உயரத்தில் உள்ள மலையின் உச்சிக்கு 3,213 மீட்டர் பயணம் செய்து மணிக்கு 600 பயணிகளை அழைத்து செல்லக்கூடிய உலகின் முதல் ரோப் கார் என்னும் பெருமையை தட்டிச் சென்றுள்ளது. 50 மில்லியன் யூரோ செலவில் செய்யப்பட்டுள்ள இந்த ரோபோ கார் தலைசிறந்த தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.