Dec 22

காந்த சக்தி மூலம் இயங்கும் லிப்ட்: விரைவில் நடைமுறைக்கு வரும் என ஜெர்மனி நிறுவனம் தகவல்

ஜெர்மனியில் உள்ள உலகின் மிகப்பெரிய லிப்ட் தயாரிப்பு நிறுவனம் கேபிள் இல்லாமல் காந்த சக்தி மூலம் இயக்கும் லிப்டை உருவாக்கி வருகிறது. இந்த லிப்டானது காந்த சக்தி மூலம் சுவரில் பொருத்தப்பட்டிருக்கும்.

இது மேலே, கீழே மற்றும் பக்கவாட்டில் நகரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனோடு பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார் பக்கவாட்டில் திரும்பி லிப்டை நகர்த்தி கொண்டு செல்லும் என்றும் இதன் மூலம் ஒரு கட்டிடத்திலிருந்து அதனை ஒட்டியுள்ள மற்றொரு கட்டிடத்திற்கும் செல்ல முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

புதியதாக வடிவமைக்கப்பட்ட இந்த லிப்ட் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும் ஒரே நேரத்தில் எத்தனை லிப்ட்களை வேண்டுமானாலும் இந்த காந்த வழித்தடத்தில் இயக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் விலை மிகவும் அதிகமாகும். 2020-ம் ஆண்டில் பெர்லினில் உள்ள கட்டிடத்தில் இந்த லிப்ட் பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.