Mar 07

அவசரமாக நாளை கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு சபை

வட கொரியாவின் தொடரும் அத்துமீறலால் ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக நாளை கூடுகிறது

ஜப்பானில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தை தாக்கும் நோக்கத்தில் அதற்கான ஒத்திகையாகவே இந்த ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மேற்குறித்த நெருக்கடியை சமாளிக்கவும், தொடரும் அத்துமீறல் தொடர்பாக விவாதிக்கவும், அந்நாட்டுக்கு எதிராக மேலும் சில தடைகள் விதிப்பது தொடர்பாக ஆலோசிக்கவும் ஐ.நா. பாதுகாப்பு சபை நாளை அவசரமாக கூடுகிறது

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தில் இந்த அவசர கூட்டத்தில் பாதுகாப்பு சபையில் உறுப்பினர்களாக இருக்கும் அனைத்து நாடுகளும் பங்கேற்கவுள்ளன.

முன்னதாக வட கொரியா ஆத்திரமூட்டும் செயல்பாடுகளை கைவிட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்ரெஸ் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.