May 10

திடீர் உடல் நலக்குறைவால் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவர் நலமுடன் உள்ளதாகவும் நாளை அவர் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு வாரணாசியில் வாகன பேரணி நடத்தியபோது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அப்போது உடனே டெல்லிக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டு, ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

அதன் பின்னர் உடல் பரிசோதனை மற்றும் சில சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது.