May 10

மடத்தடியில் திடீரென முளைத்த புத்தர் சிலை

திருகோணமலை மடத்தடி வீரகத்திப் பிள்ளையார் ஆலய வளாகத்தை  அண்டிய கடையொன்றின் முன் மடத்தடிச் சந்தியை பார்த்த வண்ணம் திங்கள் இரவோடு இரவாக புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது.

வெசாக் தினத்தை முன்னிட்டு திருகோணமலை நகர் எங்கும் வெசாக் கூடுகளும் பந்தல்களும் அலங்கரிப்புகளும் இடம்பெற்றுள்ள நிலையில் என்றும் இல்லாத வகையில் சீமெந்து மற்றும் பொருட்களால் நிர்மாணிக்கப்பட்ட சிலையாக மேற்படி சிலை வைக்கப்பட்டுள்ளது. இச்சிலை நிரந்தரமாக தரித்து விடுமா என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

வரலாற்றுப் புகழ் கொண்ட வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தை புனர்நிர்மாணம் செய்ய முடியாமல் ஆலய நிர்வாகம் கடந்த பல வருடங்களாக பாராட்டும் நடத்தி வந்துள்ளது. வன்செயல் காலத்தில் இவ்வாலயத்தின் 12 நூறறாண்டைச் சேர்ந்த சிலைகள் உடைக்கப்பட்டு துவாம்ஷம் செய்யப்பட்டிருந்த நிலையிலேயே மேற்படி ஆலயத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கான முயற்சிகள முன்னெடுக்கப்பட்டு கடந்த வருடம் ஜூலை மாதமளவில் ஆலயத்தை மீள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன்  அடிக்கல்லை நாட்டி திருகோணமலை மடத்தடி வீரகத்திப் பிள்ளையார் ஆலய வளாகத்தை  அண்டிய கடையொன்றின் முன் மடத்தடிச் சந்தியை பார்த்த வண்ணம் திங்கள் இரவோடு இரவாக புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது.

வெசாக் தினத்தை முன்னிட்டு திருகோணமலை நகர் எங்கும் வெசாக் கூடுகளும் பந்தல்களும் அலங்கரிப்புகளும் இடம்பெற்றுள்ள நிலையில் என்றும் இல்லாத வகையில் சீமெந்து மற்றும் பொருட்களால் நிர்மாணிக்கப்பட்ட சிலையாக மேற்படி சிலை வைக்கப்பட்டுள்ளது. இச்சிலை நிரந்தரமாக தரித்து விடுமா என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

வரலாற்றுப் புகழ் கொண்ட வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தை புனர்நிர்மாணம் செய்ய முடியாமல் ஆலய நிர்வாகம் கடந்த பல வருடங்களாக பாராட்டும் நடத்தி வந்துள்ளது. வன்செயல் காலத்தில் இவ்வாலயத்தின் 12 நூறறாண்டைச் சேர்ந்த சிலைகள் உடைக்கப்பட்டு துவாம்ஷம் செய்யப்பட்டிருந்த நிலையிலேயே மேற்படி ஆலயத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கான முயற்சிகள முன்னெடுக்கப்பட்டு கடந்த வருடம் ஜூலை மாதமளவில் ஆலயத்தை மீள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன்  அடிக்கல்லை நாட்டி வைத்தார்.