May 09

இந்தோனேசிய ஜகர்த்தா பிராந்திய ஆளுநருக்கு 2 வருட சிறை

இந்தோனேசிய ஜகர்த்தா பிராந்திய பதவியை விட்டு வெ ளியேறிச் செல்லும் ஆளுநர் பஸுகி தஜஹயா புர்னமாவிற்கு  மத நிந்தனைக் குற்றச்சாட்டில்  இரு வருட சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

 கடந்நத வருடத்தில்  தன்னால் ஆற்றப்பட்ட பிரசார உரையொன்றின் போது கிறிஸ்தவரான அஹொக் என சுருக்கப் பெயரால் அழைக்கப்படும்  அவர், இஸ்லாத்தை அவதூறு செய்யும் கருத்தை வெளியிட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

 இந்நிலையில் புர்னமா தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். அவர் தனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப் போவதாக சூளுரைத்துள்ளார்.

 தீர்ப்பு வழங்கப்பட்டதும் புர்னமா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.  அவரது பதவிக் காலம்  எதிர்வரும் ஒக்டோபர் மாதம்  பூர்த்தியடைகின்ற நிலையில் அது வரை அவரது பதவியை பிரதி ஆளுஞரான தஜாரோ செய்புல் ஹிடாயத் வகிக்கவுள்ளார்.

அவரது வழக்கு இந்தோனேசியாவின் மத சகிப்புத் தன்மைக்கான ஒரு பரீட்சையாக நோக்கப்படுகிறது.