May 09

சீனாவில் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்த பாடசாலை பஸ்

கிழக்கு சீனாவில்   பாடசாலை பஸ்ஸொன்று நேற்று  செவ்வாய்க்கிழமை  விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததில்  பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் 11  தென் கொரிய மற்றும் சீன சிறார்களும் பஸ்ஸின் சாரதியும் உயிரிழந்துள்ளனர்.

 பலியான சிறுவர்கள் 3  வயதுக்கும் 6  வயதுக்கும் இடைப்பட்ட வயதுடையவர்களாவர். இந்த விபத்தில் ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஷாங்டொங் மாகாணத்தில் வெயிஹாய் நகரிலுள்ள  தென் கொரிய சர்வதேச  பாடசாலையில் கல்வி கற்று வந்த அந்த சிறுவர்கள் பாடசாலைக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்த வேளையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றள்ளது. இந்த விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் இந்த அனர்த்தம் குறித்து பிராந்திய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.