May 09

ரஷ்ய புலனாய்வு உத்தியோகத்தருக்கு தலையைத் துண்டித்து மரணதண்டனை

ஐ.எஸ். தீவிரவாதிகள் தம்மால் சிரியாவில் கைதியாக பிடிக்கப்பட்ட ரஷ்ய புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவருக்கு தம்மால் தலையைத் துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை வெளிப்படுத்தும் புதிய காணொளிக் காட்சியொன்றை  வெளியிட்டுள்ளதாக  அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட சைட் கண்ணகாணிப்பு இணையத்தளம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

ரஷ்யாவானது 1945  ஆம் ஆண்டு நாஸி ஜேர்மனியுடனான போரில் வெற்றியடைந்ததைக் குறிக்கும் ஞாபகார்த்த  கொண்டாட்டத்தையொட்டி இந்த 12 நிமிடக்  காணொளிக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

 அந்தக் காணொளிக் காட்சியில் கறுப்பு ஆடை அணிவிக்கப்பட்டிருந்த  கைதியொருவர்  பாலைவனப் பிராந்தியமொன்றில் மண்டியிட்டு அமர்ந்திருந்தவாறு ஏனைய ரஷ்ய முகவர்களை சரணடைய வலியுறுத்துகிறார்.

 முட்டாளான  தான் இவ்வாறு பிடிபடும் பட்சத்தில்  தனது நாடு தனக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு அமைய தன்னைக் கைவிடாது என நம்பியிருந்ததாக   அந்தக் கைதி மேற்படி காணொளிக் காட்சியில் தெரிவித்தார்.