May 09

தென் கொரியாவின் முக்கியத்துவம் மிக்க ஜனாதிபதி தேர்தல்

இதுவரை வெ ளியான  தேர்தல் பெறுபேறுகளின் பிரகாரம்  முன்னாள் மனித உரிமைகள் சட்டத்தரணியும்  முன்னாள் வட கொரிய அகதியுமான   லிபரல் கட்சியைச் சேர்ந்த மூன் ஜே - இன்   அதிகளவு வாக்குகளைப் பெற்று மாபெரும் வெற்றியைப்  பெற வாய்ப்புள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

அவருக்கான பிரதான போட்டியாளராக  மையவாத கட்சியைச் சேர்ந்த அஹ்ன் சியோல்- சூ விளங்குகிறார்.  இந்தத் தேர்தலில் மொத்தம் 13  வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதியான  பார்க் கெயுன் -ஹை  ஊழல் குற்றச்சாட்டில் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டதையடுத்து புதிய தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு  அந்நாட்டு மக்கள் உள்ளாகினர்.

 பொருளாதாரம் சம்பந்தமான பிரச்சினைகள்  இந்தத் தேர்தலில் செல்வாக்குச் செலுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி தேர்தலானது வட கொரியா தொடர்பான  தென் கொரியாவின் கொள்கையில் மாற்றமொன்றைக் கொண்டு வரும் ஒன்றாக நோக்கப்படுகிறது.

 பார்க் கெயுன் ஹை வட கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும்  ஏறத்தாழ துண்டித்துள்ள நிலையில்,   மூன் ஜே - இன்  அந்நாட்டுடனான  தொடர்புகளை  அதிகரிக்க விருப்பம் கொண்டுள்ளார்.

கொரிய ஜனநாயக கட்சியின் தலைவரான அவர்வட கொரியாவுக்கு எதிரான அழுத்தங்களையும் தடைகளையும் தொடர்ந்து பேணும் அதேசமயத்தில்  அந்நாட்டுடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளார்.