May 09

ஆஸ்திரேலியரின் சாதனையை முறியடித்து கின்னஸ்சில் இடம்பிடித்த சென்னை இளைஞர் சித்தார்த்

சென்னையை சேர்ந்த 20வயது இளைஞர் சித்தார்த் நாகராஜன் ஒரு நிமிடத்தில் 2019 தடவை டிரம்ஸ் இசைக்கருவியில் ஒலி எழுப்பி கின்னஸ்சில் இடம் பிடித்துள்ளார்.

சித்தார்த்நாகராஜன் தந்தை நாகி. இவர் இளையராஜா, வித்யாசாகர் போன்ற பிரபல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியவர்.


தன்னுடைய மகனுக்கு சின்ன வயதிலேயே டிரம்ஸ் வாசிக்க கற்று கொடுத்ததால் அவர் திறம்பட பயின்று ஆசியிவின் அதிவேக டிரம்மர் என்றழைக்கின்ற அளவுக்கு வாசிக்க தொடங்கினார்.


இவர் கடந்த மார்ச் மாதம் கின்னஸ் சாதனை படைக்கும் நோக்கில் ஒரு நிமிடத்தில் 2109 பீட்களை (ஒலி) சாதனை புரிந்துள்ளார். இந்த சாதனையை ஸ்கைப் மூலம் கின்னஸ் குழு உறுப்பினர்கள் மதீப்பீடு செய்துள்ளனர். இதுவரை யாரும் ஒரு நிமிடத்தில் 2109 பீட்கள் வாசித்ததில்லை என்பதை உறுதிப்படுத்தினர்.


பின்னர் அதற்கான கின்னஸ் சான்றிதழை வழங்கியுள்ளது கின்னஸ் குழு. இவருக்கு முன்பு ஆஸ்திரேலியாவைசேர்ந்த ஜார்ஜ் ஒரு நிமிடத்தில் 1589 பீட் களை வாசித்தது சாதனையாக இருந்தது. அதை சித்தார்த் முறியடித்து கின்னஸ்சில் இடம்பிடித்தார் என்பது குறி்ப்பிடத்தக்கது.


இது குறித்து சித்தார்த் கூறும்போது: கின்னஸ் சாதனை என்பது வாழ்நாள் கனவு. நீண்ட நாள் பயிற்சிக்கு கிடைத்த வெற்றி எனவும், கின்னஸ் புத்தகத்தில் என் பெயர் இடம்பெறுவதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் எனக்கு கூரியர் பார்சலில் வந்தது. அதை பிரித்துபார்த்ததும் கின்னஸ் சாதனை சான்றிதழ் இருந்தது. அந்த தருணம் வாழ்வின் மறக்க முடியாத தருணம். என உற்சாகத்துடன் கூறினார்.