May 09

பாகுபலி படத்தால் 9 வயது சிறுவனின் வாழ்வில் நடந்த அதிசயம்

கேரளா மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் கே.எம்.ஜெயராஜ். இவருக்கு சாரபாய் என்ற மனைவியும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகன் ஒருவரும் உள்ளார்.

ஜெயராஜ் தன் மகனுக்கு வித்தியாசமாக பெயர் வைக்க வேண்டும் என்று எண்ணி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் பாகுபலி என பெயர் வைத்துள்ளார்.

பாகுபலி என்பது பழமையான பெயர் என்பதால், சிறுவனை அவனது நண்பர்கள் கிண்டலடித்து வந்துள்ளனர். இதனால் மிகவும் மனவருத்ததிற்குள்ளான அவன், இந்த பெயர் குறித்து தினந்தோறும் பெற்றோரிடம் சண்டையிட்டு வந்துள்ளான்.

இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாகுபலி பாகம்-1 வெளியானது. அப்படம் வெளியான பின்பு சிறுவனை கிண்டலடிப்பதை அனைவரும் நிறுத்தியுள்ளனர். தற்போது பாகுபலி இரண்டாம் பாகம் வெளியான பிறகு அவனை நண்பர்கள் பலரும் ஜெய் பாகுபலி என அழைக்கிறார்களாம்.

இதனால் அச்சிறுவன் மிகவும் மகிழ்ச்சியோடு உள்ளதாகவும், இது நாள் வரை தங்களிடம் சண்டை போட்டு வந்த மகன் தற்போது மகிழ்ச்சியாக இருப்பது தங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.