Mar 07

அமெரிக்காவுடன் மோத தயாராகிறது வடகொரியா

ஜப்பானில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தை தாக்கும் நோக்கத்தில் அதற்கான ஒத்திகையாக ஏவுகணைகளை பரிசோதித்ததாக வட கொரியா தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் தடை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கண்டனத்துக்குள்ளாகி வரும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் நவீனரக ஏவுகணைகளையும் தொடர்ச்சியாக பரிசோதித்து வருகிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை  நான்கு ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்தது. இந்த ஏவுகணைகளில் மூன்று  கிழக்கு கடல் பகுதியில் விழுந்ததாக தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென் கொரியா மற்றும் அமெரிக்கா இடையே கூட்டு இராணுவ பயிற்சி நடைபெற்றுவரும் நிலையில் நடத்தப்பட்ட ஏவுகணை பரிசோதனைக்கு ஜப்பான், தென் கொரியா  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஜப்பானில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தை தாக்கும் நோக்கத்தில் அதற்கான ஒத்திகையாக ஏவுகணை பரிசோதனை நடத்தியதாக வட கொரியா தெரிவித்துள்ளது.