May 09

நோக்கியா மொபைல் போன்கள்: இந்திய வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது

எச்எம்டி குளோபல் நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று புதிய நோக்கியா மொபைல் போன்களை பிப்ரவரி மாதம் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது. அன்று முதல் விற்பனை தேதி அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்திய வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவலை எச்எம்டி குளோபல் வழங்கியுள்ளது. 

முன்னதாக புதிய நோக்கியா மொபைல் போன்கள் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வெளியிடப்படும் என எச்எம்டி குளோபல் அறிவித்திருந்தது. இந்நிலையில் புதிய நோக்கியா போன்கள் ஜூன் மாதம் இந்தியாவில் வெளியிடப்படும் என எச்எம்டி குளோபல் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

நோக்கியா 3310, நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 மொபைல் போன்கள் முதற்கட்டமாக ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்பட்டு அதன்பின் ஆன்லைனில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வெறும் துவக்கம் தான், வரும் காலங்களில், அதிகப்படியான மொபைல் போன்களை வெளியிடுவோம் என எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் முதன்மை அலுவலர் ஜூஹோ சர்விகாஸ் தெரிவித்தார்.

சிறப்பம்சங்களை பொருத்த வரை மேம்படுத்தப்பட்ட நோக்கியா 3310 போனில் 2.4 இன்ச் வளைந்த திரை, சூரிய வெளிச்சத்திலும் திரையை துல்லியமாக பார்த்து இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அழகிய புஷ் பட்டன்கள், 2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

இத்துடன் 2ஜி கனெக்டிவிட்டி, புதிய யூஸர் இன்டர்பேஸ், எப்எம் ரேடியோ, எம்பி3 பிளேயர், 16 எம்பி இன்டெர்னல் மெமரிஸ மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி 5.0 இன்ச் 1280x720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர், 2ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கூகுள் டிரைவ் வசதியும் வழங்கப்படுகிறது. 

புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா டிஸ்ப்ளே பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ யுஎஸ்பி, யுஎஸ்பி ஓடிஜி, ப்ளூடூத், வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், 2560 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. நான்கு நிறங்களில் கிடைக்கும் நோக்கியா 3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.5.2 இன்ச் 1280 x 720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 2ஜிபி ரேம் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 
 
புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ யுஎஸ்பி, யுஎஸ்பி ஓடிஜி, ப்ளூடூத், வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கூகுள் டிரைவ் வசதி கொண்டுள்ள நோக்கியா 5 ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட், மற்ற நிறங்கள் கொண்ட மாடல்களில் 3 ஜிபி ரேமும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், ஆர்ட் பிளாக் நிறம் கொண்ட மாடலில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அனைத்து நிறம் கொண்ட மாடல்களிலும் மெமரியை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்டோன் எல்இடி பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ யுஎஸ்பி, யுஎஸ்பி ஓடிஜி, ப்ளூடூத், வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கூகுள் டிரைவ் வசதி கொண்டுள்ள நோக்கியா 5 ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.